ராஜ்நாத் சிங் நாளை தமிழ்நாடு வருகை - தேர்தல் பரப்புரை
சென்னை: தேர்தல் பரப்புரை செய்வதற்காக பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் நாளை தமிழ்நாடு வருகிறார்.
இந்தியாவின் 17-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தேதி தொடங்கி மே19 முடிவடைகிறது. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகியுள்ளனர். இதில் தேசிய கட்சியான பாஜக தமிழ்நாட்டில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பரப்புரை மேற்கொள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தரவிருக்கிறார்.