மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையில், கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 14 விழுக்காட்டிலிருந்து 27 விழுக்காடாக உயர்த்துவதற்கான அம்மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கல் செய்தார்.
அரசு வேலை... ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு உயர்வு! - kamalNath
போபால்: மத்தியப் பிரதேசம் சட்டப்பேரவையில் அரசு வேலை, கல்வியில் ஓபிசி (OBC) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 14 விழுக்காட்டிலிருந்து 27 விழுக்காடாக உயர்த்துவதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு வேலை
இதனையடுத்து இந்த மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசிய அம்மாநில அமைச்சர் ஷர்மா, மக்களின் வளர்ச்சிக்கான மசோதாவை அரசு சரியான நேரத்தில் முடிவு செய்து நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கு மத்தியப் பிரதேச அரசாங்கம் சார்பாக முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jul 24, 2019, 5:02 PM IST