நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் முதியவர் வரை அனைவரையும் ஆட்கொண்டுள்ள ஒரு வீடியோ கேம் பப்ஜி. இந்த வீடியோ கேமிற்கு அடிமையாகும் சிறுவர்கள், இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது என்பதால் அதை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துவந்தது. சமீபத்தில் நேபாளத்திலும் இவ்விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.
பப்ஜி விளையாடிய சிறுவன் மாரடைப்பால் மரணம்! - இந்தூர்
இந்தூர்: ஆறு மணி நேரம் தொடர்ந்து பப்ஜி விளையாடிய 16 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பப்ஜி
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் நகரில் ஆறு மணிநேரம் தொடர்ந்து பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன் ஃபுர்கான் மாரடைப்பால் இறந்துள்ளான். மருத்துவமனையில் அவனை பரிசோதித்த மருத்துவர், விளையாட்டின் உற்சாகத்தில், இருதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.