திருவனந்தபுரம்:லைஃப் மிஷன் தலைமை நிர்வாக அலுவலர் யு.வி.ஜோஸ், லைஃப் மிஷன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரெட் கிரசெண்ட் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கொச்சியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்திடம் ஒப்படைத்தார். இது தற்போது ஊடகங்களில் கசிந்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வடக்கஞ்சேரியில் உள்ள லைஃப் மிஷன் வீட்டுவசதி திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 14.5 கோடி வீட்டு வசதி செலவுக்கும், ரூ.5.5 கோடி மருத்துவமனை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாக கொண்ட ரெட் கிரசண்ட் ஆணையத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் முகமது அதீக் அல் ஃபலாஹி மற்றும் யு வி ஜோஸ் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் ஏழு பக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இருப்பினும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கட்டுமான கால ஒப்பந்தம் அல்லது அதன் பின்னால் உள்ள ஒப்பந்தக்காரர் பற்றி எதுவும் இதில் கூறவில்லை.
தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய சந்தேக நபரான ஸ்வப்னா சுரேஷ் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று நம்பப்படுகிறது.
அவர்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி கட்டுமானப் பணிகளை ஒப்படைத்ததாகவும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது.