தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரிஹான்னாவின் ஒற்றை ட்வீட்... சர்வதேச அழுத்தத்திற்கு இந்தியா பதில்! - மீனா ஹாரிஸ்

டெல்லி: இந்தியாவிற்கு எதிராக உள்நோக்கத்துடன் தொடுக்கப்படும் பரப்புரைகள் வெற்றிபெறாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

By

Published : Feb 4, 2021, 2:05 PM IST

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் குறித்து பிரபல பாப் இசை பாடகர் ரிஹான்னா பதிவு செய்த ஒற்றை ட்வீட் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

ரிஹான்னாவை தொடர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், மாடல் மியா கலிபா, அமெரிக்க வழக்கறிஞர் மீனா ஹாரிஸ் ஆகிய பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக உள்நோக்கத்துடன் தொடுக்கப்படும் பரப்புரைகள் வெற்றிபெறாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பிரச்னைகளை கையாள இன்று எங்களுக்கு தன்னம்பிக்கை உள்ளது. இந்தியா அனைத்தையும் பின்னுக்கு தள்ளும்" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, வெளிநாட்டு குழுக்கள், தங்களின் நோக்கங்களை போராட்டத்தில் திணிக்க முயற்சி செய்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சித்திருந்தது. போராட்டத்தை ஜனநாயக நெறிமுறைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும், இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

ABOUT THE AUTHOR

...view details