தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெரசா, வஉசிக்கு புதுச்சேரி அரசு சார்பில்  மரியாதை! - கப்பலோட்டிய தமிழன்

புதுச்சேரி: அன்னை தெரசா நினைவு நாள், வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு, அம்மாநில அரசு சார்பில் அவர்களது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தெரசா நினைவுநாள், வ உ சி பிறந்தநாளை முன்னிட்டு மாலைகள் அணிவித்தன.

By

Published : Sep 5, 2019, 9:59 PM IST

பாரத ரத்னா அன்னை தெரசாவின் நினைவு நாள் இன்று புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தெரசா நினைவுநாள் மற்றும் வஉசியின் பிறந்தநாளையொட்டி, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கிறிஸ்துவ மத போதகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பாக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details