கர்நாடகாவின் பெலாகவி மாவட்டத்தில் ஹனுமபுரா கிராமத்தில் வசித்துவந்தார் லட்சுமவ்வ வதர். இவருக்கு கீர்த்தி (10), ஸ்ராவணி (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
இரண்டு குழந்தைகளுடன் தாயார் குளத்தில் குதித்து தற்கொலை!
கர்நாடகா: பெலாகவி பகுதியில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குதித்து தற்கொலை
இவர் தனது குழந்தைகள் கீர்த்தி, ஸ்ராவணி இருவரையும் குளத்தில் தூக்கி வீசியுள்ளார். அதன்பின், அவரும் குளத்தில் குதித்துள்ளார். இதில், மூன்று பேரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இதையும் படிங்க: நொய்டா பேருந்தில் பெண் செய்தியாளருக்கு தொல்லை
TAGGED:
karnataka crime news