தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொசுக்களை கட்டுப்படுத்த டிப்ஸ்! - கரோனா காலத்தில் கொசு

மாஸ்க்குகள் அணிவதன் மூலமும் தகுந்த இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமும் கரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்து கொள்ள முடியும். அதேபோல், கொசு மருந்து, வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நகராட்சி அமைப்புகளை சார்ந்து இருப்பதை தவிர்த்து, டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை விரட்டியடிக்க மக்கள் எளிதான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Mosquito
Mosquito

By

Published : Jun 10, 2020, 8:04 PM IST

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் அதேவேளையில், கொசுக்களின் இனப்பெருக்கத்தையும் நாடு எதிர்கொள்ள உள்ளது. பருவ மழை காலத்தில்தான் கொசுக்கள் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், கொசுக்களால் பரவும் நோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். மாஸ்க்குகள் அணிவதன் மூலமும் தகுந்த இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமும் கரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்து கொள்ள முடியும். அதேபோல், கொசு மருந்து, வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நகராட்சி அமைப்புகளை சார்ந்து இருப்பதைத் தவிர்த்து விட்டு, டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை விரட்டியடிக்க மக்கள் எளிதான வழிமுறைகளை பின்பற்றத் தொடங்க வேண்டும்.

இது குறித்து பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியின் தலைமை பூச்சியியல் வல்லுநர் மருத்துவர் ராம்பாபு கூறுகையில், "வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சரியான அளவில் கலந்து உடலில் தடவிக் கொள்வதன் மூலம் எட்டு மணி நேரத்திற்கு கொசுவை அண்ட விடாமல் தவிர்க்கலாம். வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றைத் தாக்கி அழிக்கும் பண்புகள் வேம்பிற்கு உள்ளது. தேங்கிய தண்ணீரில் இருக்கும் கொசு முட்டைகளை இந்த வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலவை கொல்ல உதவும். அனைத்து விதமான எண்ணெயையும் இதற்காகப் பயன்படுத்தலாம். துளசி, புதினா, சிட்ரோனெல்லா, எலுமிச்சைப் புல் ஆகிய செடிகளின் மூலம் கொசுவின் இனப்பெருக்கத்தைத் தடுக்க முடியும்.

அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொசுவலையின் தேவை நகரங்களில் குறைந்து வருகிறது. இருப்பினும், கிராமப்புறங்களில் மிகப் பிரபலமாக கொசுவலைகள் உள்ளன. கொசுக் கடியிலிருந்து தப்பிக்க இந்த வலைகள் பெரிய அளவில் உதவுகின்றன. கதவு, ஜன்னல் ஆகியவற்றை மாலை நேரங்களில் மூடி வைப்பது நல்லது. காற்றோட்டத்திற்காக ஜன்னல், கதவு ஆகியவற்றில் ஓட்டை இடலாம்.

பருவ மழை தொடங்குவதற்கு முன்பு, தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கும் வகையில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சேகரிப்புக் குழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்தக் குட்டைகள் மூலம் மழைநீர் நிலத்தடிக்கு சென்றுவிடும்.

தண்ணீர் தொட்டி, குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றில் அடிக்கடி குளோரின் சேர்க்க வேண்டும். பருவ மழை தொடங்கியவுடன், இந்த நீர்நிலைகளில் கம்பூசியா மீன்களை வளர்க்கலாம்.

கொசுக்கள், தேங்கிய தண்ணீரிலேயே முட்டைகள் இடும். குழிகள், கை பம்புகள், கழிவு நீர் குட்டைகள், பள்ளங்கள், குளங்கள், வடிகால்கள் ஆகிய இடங்களில்தான் கொசுக்கள் இனப்பெருக்கம் மேற்கொள்ளும். தண்ணீர்த் தொட்டி, பைப்புகள் ஆகியவற்றை எப்போதும் மூடியே வைக்க வேண்டும். தேங்கிய தண்ணீரில் இருக்கும் கொசு முட்டைகளை அழிக்க வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகியவற்றை தெளிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details