தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி!

By

Published : Oct 17, 2020, 9:14 AM IST

Updated : Oct 17, 2020, 1:01 PM IST

டெல்லி: நடப்பாண்டுக்கான (2020) நீட் தேர்வில் திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களைவிட அதிக நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

NEET ISSUE
NEET ISSUE

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்தியளவில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. கரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதிய இத்தேர்வின் முடிவுகளை நேற்று (அக்.17) தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதில் திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களைவிட அதிக பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசியத் தேர்வு முகமை அறிவித்தது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதேபோல உத்தராகண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37,301 பேர் தேர்ச்சியடைந்தாக அறிவிக்கப்பட்டது. தெலங்கானா மாநிலத்தில் 50,392 பேர் தேர்வினை எழுதிய நிலையில், 1,738 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், 49.15 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில், 1,56,992 பேர் தேர்வை எழுதியுள்ளனர். அதில், 7,323 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், 60.79 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளதாக புள்ளி விவரப் பட்டியிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முடிவுகள் அடங்கிய புள்ளி விவரப் பட்டியலை தேசிய தேர்வு முகமை இணையத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. தேர்வினை எழுதும்போது, மாணவ, மாணவிகள் கடும் இன்னலுக்கு உள்ளானது விவாத பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

Last Updated : Oct 17, 2020, 1:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details