தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருடனை பிடிக்க முயன்று ரயிலிலிருந்து குதித்த தாய், மகள்! - மேற்கு வங்கம்

ஆக்ரா: ஓடும் ரயிலில் நகை பறித்த திருடனை பிடிக்க முயன்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தாய், மகள் ரயிலிலிருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலிலிருந்து குதித்த தாய், மகள்

By

Published : Aug 4, 2019, 10:33 AM IST

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மீனா சுபென் (47), இவரது மகன் ஆகாஷ் சுபென் (24), மகள் மனிஷா சுபென் (21). இவர்கள் நேற்று ஹர்சாத் நிசாமுதினிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டாவிற்கு சென்றுகொண்டிருந்தனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள விருந்தாவன் பகுதியில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, காலை 3.40 மணியளவில் அவர்கள் இருந்த பெட்டிக்குள் நுழைந்த திருடன் அவர்கள் வைத்திருந்த கைப்பையை பறித்துச்சென்றுள்ளான். இதையடுத்து மீனா, அவரது மகள் திருடனை பிடிக்க முற்பட்டு ரயிலிலிருந்து குதித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய காவல் துறையினர், பையை திருடிச்சென்ற திருடன் மற்றொரு ரயிலில் பிடிபட்டதாகவும், அவர் வைத்திருந்த பையில் நான்காயிரம் ரூபாய், இரண்டு கைப்பேசிகள், ஏடிஎம் கார்டுகள், வாக்காளர் அட்டை உள்ளிட்ட சில ஆவணங்கள் இருந்ததாகவும் கூறினர்.

மேலும், இந்தச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் மீனாவின் மகன் ஆகாஷ் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், ரயிலிலிருந்து குதித்த இருவர்களது உடலும் இரு தண்டவாளங்களுக்கு நடுவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details