கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணித்தது. பேருந்து சிறிது தூரம் சென்றதும், இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெண்ணிடம் சேட்டையில் இறங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து முகநூலில் (பேஸ்புக்) நேரலையாக விளக்கமும் அளித்தார். இந்த சம்பவம் இன்று (நவ.28) அதிகாலை நடந்துள்ளது.
பேருந்தில் இளைஞர் பெண்ணிடம் அத்துமீறிய காணொலி வைரல்.! - Molestation attempt on Kerala Bus
திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்துக்குள் இளம் பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை காவலர்கள் கைது செய்தனர். இதுதொடர்பான காணொலிக் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Molestation attempt on board Kallada bus in Kerala, accused arrested
இதுகுறித்து மலப்புரம் கோட்டக்கல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சேட்டை இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் அவர் பெயர் முனாவீர் என்பதும் கேரளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க : பொள்ளாச்சி விவகாரம் குறித்த சர்ச்சை பேச்சு: இயக்குநர் பாக்யராஜ் மீது புகார்