தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நவீன் பட்நாயக், ஜெகன் மோகனுக்கு மோடி வாழ்த்து! - நவீன் பட்நாயக்

டெல்லி: சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி வாழ்த்து

By

Published : May 23, 2019, 4:43 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் முடிவுகளும் வெளியாகிவருகின்றன.

மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், ஒடிசா நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 146 தொகுதிகளில் 110த்தில் முன்னிலையும், மூன்றில் வெற்றியும் பெற்றுள்ள அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளார்.

அதேபோன்று, 175 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் 116 தொகுதிகளில் முன்னிலை, 32 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில், மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துள்ள மோடி இவர்கள் இருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details