கரோனா பெருந்தொற்று நோயால் உலக நாடுகள் பெரும் பாதிப்படைந்துள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ரஷ்யாவில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதன் தீவிரத்தன்மையை உணர்ந்த அந்நாட்டு அதிபர் புடின் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார்.
இதனிடையே, ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின் சர்வதேச அளவில் அரசின் முக்கியத் தலைவர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷ்ய பிரதமர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் எனப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.