தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்ரம்ப்புடன் மோடி தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க மாட்டார்?

டெல்லி: இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது குடும்பத்துடன் தாஜ்மஹால் செல்லும் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி உடன் செல்லவதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

modi trump, மோடி ட்ரம்ப்
modi trump

By

Published : Feb 22, 2020, 3:12 PM IST

Updated : Feb 22, 2020, 3:45 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிப்ரவரி 24,25 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் இரண்டாம் நாளில், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கவுள்ளார்.

இது தொடர்பாக மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "குடும்பத்துடன் இந்தியா வரும் ட்ரம்ப் தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்கவுள்ளார். அவர்களுடன் பிரதமர் மோடி செல்வதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு" என்றார்.

மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜெரால்டு குஷ்னர் ஆகியோருடன் இந்தியா வரும் ட்ரம்ப், முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து ஆமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைத் திறந்துவைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தநாள் காலை ஆக்ராவுக்குச் செல்லும் ட்ரம்ப், அங்கு தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்வையிடவுள்ளார். ட்ரம்ப்புடன் ஏராளமான அமெரிக்க அலுலர்களும் உடன்வருகின்றனர்.

இதையும் படிங்க : ட்ரம்பின் முன் 'தமால்' நடனமாடி கலக்கப்போகும் நாட்டுப்புற கலைஞர்கள்

Last Updated : Feb 22, 2020, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details