தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராம் ஜெத்மலானி மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் - மோடி - ராம்ஜெத் மலானி

டெல்லி: மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மோடி - ராம்ஜெத் மலானி

By

Published : Sep 8, 2019, 11:04 AM IST

Updated : Sep 8, 2019, 11:40 AM IST

உடல்நலக் குறைவால் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி இன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 95. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் சீரிய பங்களிப்பு அளித்தவரான ராம் ஜெத்மலானியை இந்த தேசம் இழந்துள்ளது. அவர் நகைச்சுவையானவர், தைரியமானவர், எந்தவொரு செயலிலும் தன்னை வெளிப்படுத்துவதில் சமரசம் செய்துகொள்ளாதவர்" எனப் புகழஞ்சலி சூட்டினார்.

மேலும், அவர் மனதுடன் பேசும் திறன் படைத்தவர் என்று சொன்ன பிரதமர் நரேந்திர மோடி, எவ்வித அச்சமும் இல்லாமல் பல பணிகளை முடித்துக்காட்டுபவர் ஜெத்மலானி எனப் புகழுரைத்தார்.

தொடர்ந்து, பல நேரங்களில் அவருடன் பழகியது தன் பாக்கியமாகக் கருதுவதாகவும் அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் இல்லாமல் போனாலும், அவரின் பணி செயல்பாடுகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்றும் கூறினார்.

Last Updated : Sep 8, 2019, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details