தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகமே நம்மை பாராட்டுகிறது: மோடி பெருமிதம்! - சுகாதாரம்

காந்தி நகர்: 60 கோடி மக்களுக்கு கழிவறை வசதியை 60 மாதத்தில் உருவாக்கிக் கொடுத்ததற்கு, உலகமே நம்மை பாராட்டுகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் கொள்கிறார்.

Modi

By

Published : Oct 2, 2019, 10:45 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, இன்று மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தபால் தலை ஒன்றை வெளியிட்டது. தற்போது தபால் தலை, நாணயங்கள் காந்தியை போற்றும் வகையில் வெளியிடப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, 60 கோடி மக்களுக்கு கழிவறை வசதியை 60 மாதத்தில் உருவாக்கிக் கொடுத்ததற்கு, உலகமே நம்மை பாராட்டுகிறது. அது மட்டுமல்லாது 11 கோடி கழிப்பறையும் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளுக்கு பாதுகாப்பு இவையே காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவை. ஒரு தடவை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத்தின் பாடலை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி!

ABOUT THE AUTHOR

...view details