மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதனால் பரப்புரை, பொதுக்கூட்டங்கள், வேட்புமனு தாக்கல் என அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் களமிறங்குகிறார். அங்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
மேலும், அவரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2014 தேர்தலில் பேட்டியிட்ட அஜய் ராயை மீண்டும் அங்கு களமிறக்குகிறது காங்கிரஸ்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தேர்தல் அலுவலர் சுரேந்திர சிங்கிடம், இன்று காலை தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருடன் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்தத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.