தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மலை கோயிலில் மோடி தியானம் செய்ததில் என்ன தவறு இருக்கிறது?' - கெடர்நாத் மலை கோயில்

டெல்லி: 'பிரதமர் மோடி பக்தி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது புதிதல்ல, ஆகையால் கேதார்நாத் மலை கோயிலில் அவர் வழிபட்டதை எதிர்க்கட்சிகள் விவாதப் பொருளாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என ஜனதா தளம் கட்சியின் முக்கிய பிரமுகர் கே.சி. தியாகி தெரிவித்தார்.

ஜனதா தளம் கட்சியின் முக்கிய பிரமுகர் கே.சி தியாகி

By

Published : May 20, 2019, 10:46 AM IST

மக்களவைத் தேர்தல் பரப்புரைகளை முடித்துக்கொண்டு கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் மோடி, உத்ரகாண்ட் மாநிலம் கேதார்நாத் மலைக் கோயிலில் 15 மணி நேரம் தியானம் செய்தார். இதனை இணையதள வாசிகள் மட்டும் இல்லாமல், அரசியல் தலைவர்களும் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், ஜனதா தளம் கட்சியின் முக்கியப் பிரமுகரான கே.சி. தியாகி, பிரதமர் மோடி தியானம் செய்ததில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

மேலும், அடிப்படையில் மோடி ஒரு சிறந்த ஆத்திகவாதி ஆவார். அதனால் அவர் இதுபோன்ற பக்தி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது புதிதல்ல, ஆகையால் இதை விவாதப் பொருளாக எதிர்க்கட்சிகள் மாற்றுகிறார்கள், மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details