அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளை நாடே கொண்டாடிவரும் சூழலில், “வைஷ்ணவ் ஜன தோ” என்ற காந்திக்கு மிகவும் பிடித்த பாடலை நமது ஈடிவி பாரத், இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களைக் கொண்டு உருவாக்கியுள்ளது.
ஈடிவி பாரத்தின் பாடலை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி! - Modi News
அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈடிவி பாரத் வெளியிட்டுள்ள சிறப்புப் பாடலை பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பாடலை ஈடிவி பாரத்தின் தலைவரும் இந்தியாவின் மிக முக்கிய நபர்களில் ஒருவருமான ராமோஜி ராவ் வெளியிட்டார். இந்நிலையில், இந்தப் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஈடிவி பாரத் அவருக்கு பிடித்த பாடலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. மகாத்மாவின் கனவான சுத்தமான இந்தியாவைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஊடகம் மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளது. பிளாஸ்டிக் இல்லா நாட்டை உருவாக்குவதுதான் தற்போது நமக்குள்ள கடமை” என்று பதிவிட்டுள்ளார்.