தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைவர்கள் நினைவிடங்களில் மோடி அஞ்சலி - காந்தி

டெல்லி: மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் தலைவர்கள் நினைவிடங்களில் இன்று அஞ்சலி செலுத்தினார்.

Modi

By

Published : May 30, 2019, 8:39 AM IST

மக்களவைத் தேர்தலுக்குப்பின் நரேந்திர மோடி மீண்டும் இந்தியப் பிரதமராக இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பிரதமர் மோடி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

தேசிய போர் நினைவகத்தில் மோடி

முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக மக்களவை உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி

அதன் பின்னர், ராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாகப் புதிதாக அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தில் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் காணொளி

ABOUT THE AUTHOR

...view details