தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரயில் மோதி வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு: மோடி இரங்கல் - ரயில் மோதி வெளிமாநில தொழிலாளர்கள் பலி: மோடி இரங்கல்

மும்பை: மகாராஷ்டிராவிலிருந்து மத்தியப் பிரதேசத்துக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 16 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து
ரயில் விபத்து

By

Published : May 8, 2020, 10:31 AM IST

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, பலர் தங்கள் மாநிலத்துக்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து சத்தீஸ்கருக்கு வெளிமாநில தொழிலாளர்கள் நடந்தே சென்றுள்ளனர்.

அப்போது, கலைப்பு ஏற்பட்டு அவர்கள் அவுரங்காபாத் ரயில் பாதையில் படுத்து உறங்கியுள்ளனர். இதையடுத்து, அந்த பாதையில் சென்ற சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அவுரங்காபாத் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைத்து வேதனை அடைகிறேன்.

மோடி

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேட்டறிந்தேன். அவர் நிலைமையை தொடர்ந்து கண்காணித்துவருகிறார். அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கோர விபத்து: தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மீது ஏறிய சரக்கு ரயில்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details