தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் வந்துவிட்டது - 'பி.எம் நரேந்திர மோடி'க்குத் தடை - PM MODI FILM

பி.எம் நரேந்திர மோடி

By

Published : Apr 10, 2019, 2:25 PM IST

Updated : Apr 10, 2019, 2:52 PM IST

2019-04-10 14:22:00

டெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் பி.எம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் ஆணையம் தடை

நடிகர் விவேக் ஓபராயின் நடிப்பில் நாளை திரைக்கு வரவிருந்தது பி.எம். நரேந்திர மோடி திரைப்படம். பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் இன்று தடைவிதித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. இந்நிலையில், அரசியல் சார்ந்த கருத்துகளை பிரசாரம் செய்யும் விதமாக எடுக்கப்படும் திரைப்படங்களை திரையிடமுடியாது எனக்கூறி தேர்தல் ஆணையம் தடைவித்துள்ளது. ஏற்கனவே, இந்தப் படத்தைத் திரையிட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலை தேர்தல் ஆணையம் இம்முடிவை இன்று எடுத்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த உச்ச நீதிமன்ற விசாரணையில் மத்திய அரசுக்கு இன்று காலை பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அடுத்த அதிரடியாக தேர்தல் ஆணையமும் புதிய முடிவை எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Apr 10, 2019, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details