ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்து, பொருளாதார ரீதியாக கரோனாவை இந்தியா எதிர்கொள்ளும் விதம் குறித்தும், ரிசர்வ் வங்கியின் முடிவுகள் குறித்தும் விளக்கமாகப் பேசினார்.
மோடியின் அரசு சிறப்பாக செயல்படுகிறது: அமித் ஷா பாராட்டு
டெல்லி: கரோனாவுக்கு எதிராக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாகச் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சக்திகாந்த தாஸ் செய்தியாளர் சந்திப்பு குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், கரோனாவை வீழ்த்தி, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற்ற இது உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கரோனாவை இந்தியாவில் இருந்து அழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.