மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில், பாதுகாப்புப் படையினர் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்கியுள்ளனர். வெடிகுண்டு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அந்த வாகனத்தில் பயணம் செய்த பாதுகாப்புப் படையினர் 15 பேர் உயிரிழந்தனர்.
கட்சிரோலி மாவோயிஸ்ட் தாக்குதல் : மோடி கண்டனம் - கட்சிரோலி
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில், பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மேல் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
modi
இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மோடி தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலியான வீர்ரகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதாகவும், அவர்களின் இந்த தியாகத்தை தேசம் மறக்காது என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.