தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாக்குதலுக்கு காரணமானவர்கள் பெரிய விலை கொடுப்பர்: மோடி சூளுரை

டெல்லி: புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் பெரிய விலையை கொடுப்பார்கள் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

modi

By

Published : Feb 15, 2019, 1:25 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த செயலுக்கு ஒட்டுமொத்த உலகமுமே கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.

மேலும், வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது; இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி சூளுரைத்திருக்கிறார்.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அதிவிரைவு ரயிலான வந்தே பாரத்தை பிரதமர் மோடி இன்று தலைநகர் டெல்லியில் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அப்போது, விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், "புல்வாமா தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல் இந்தியாவின் அமைதியை ஒருபோதும் குலைக்காது. உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்துக்கு தேசம் எப்போதும் பக்கபலமாக இருக்கும்.

இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் இதயமும் தற்போது கொதித்து கொண்டிருக்கிறது. நாடு தற்போது கோபமாக இருக்கிறது என்பது பிரதமர் என்ற முறையில் எனக்கு தெரியும். ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது ராணுவ வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details