தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பரப்புரை புனித யாத்திரை போன்று இருந்தது- மோடி கருத்து

டெல்லி : மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை பயணம் புனித யாத்திரை போன்று இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி

By

Published : May 22, 2019, 11:08 AM IST

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார். இதில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ஜே.பி நட்டா, பிரகாஷ் ஜவடேகர், ராம் விலாஸ் பாஸ்வான், நரேந்திர சிங் தோமர், ஹர்சிம்ரத் கவுர், அனுப்பிரியா படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தத் தேர்தல் அரசியலை தாண்டி நிறைய விஷயங்கள் இருந்தன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பொதுமக்களே போராடியதாகவும், தேர்தல் பயணம் புனித யாத்திரை போன்று இருந்ததாகவும் கூறினார். இந்தத் தகவலை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details