கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் விவியன் லால்ரெம்சங்கா என்பவர் மரணம் அடைந்தார்.
அவரின் உடலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான ஜெயந்த்ஜிரான், சின்னதம்பி ஆகியோரின் உதவியுடன் மூன்றாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார் லால்ரெம்சங்காவின் 23 வயதான நண்பர் ரபேல் ஏ.வி.எல். மல்ச்சன்ஹிமா.
தற்போது ரபேல் தனிமைப்படுத்தல் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஐந்தாயிரம் ரூபாய் நன்கொடையும் வழங்கினார்.