உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரைச் சேர்ந்த ஷாலினி யாதவ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் சென்றுள்ளார். இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பெண் கடத்தப்பட்டரா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்டதாக கருதப்பட்ட பெண் திடீரென ஃபேஸ்புக்கில் காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "என்னை யாரும் கடத்தவில்லை. நான் விரும்பியவரைத் திருமணம் செய்துகொள்ளவே பெற்றோரிடம் தேர்வு எழுதப்போதவதாக பொய் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
நானும் பைசலும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். பைசலுடன் மசூதிக்குச் சென்று, இஸ்லாமிய மதத்திற்கு நான் மாறிவிட்டேன். என் பெயரை 'பிசா ஃபாத்திமா' என மாற்றிக்கொண்டேன்.
பின்னர், திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, அரசு அலுவலர்களின் முன்னிலையில் திருமணத்தைப்பதிவும் செய்துகொண்டதாக தெரிவித்தார். மேலும், தனது திருமணத்தை 'லவ் ஜிஹாத்' என்று அழைக்க வேண்டாம் எனவும் நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
இருப்பினும் காவல் துறையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் விசாரணை நடைபெற்று வருகிறது.