தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ! - உபி சிறுமி பாலியல் வன்புணர்வு

லக்னோ : அஸாம்கர் அருகே வீட்டில் தனியாக தூக்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

minor girl rape, சிறுமி பாலியல் புணர்வு
minor girl rape

By

Published : Jan 25, 2020, 6:50 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம், அஸாம்கர் நகர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறமி ஒருவர் நேற்றிரவு தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், அவரைக் கடத்திச் சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று காலை அச்சிறுமி சாலையோரமாக மயங்கிய நிலையில் இருந்தைக்கண்ட கிராமத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து பேசிய துணை ஆய்வாளர் சுபாஷ் சந்த் தூபே, "பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வழங்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளியை கைது செய்துவோம்" என்றார்.

இதையும் படிங்க : நிர்பயா வழக்கு: கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details