உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் 12 வயதுடைய சிறுமியின் உடல் மிதப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஹமீர்பூர் தூணைக் காவல் ஆய்வாளர் ஸ்லோக் குமார் "12 வயது சிறுமியின் உடல் குளத்தில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. எனவே அங்கு சென்று உடலைக் கைப்பபற்றினோம். அதுமட்டுமல்லாமல் அங்கு கூர்மையான ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை - உத்திரப்பிரதேசம் மாநில செய்திகள்
லக்னோ: ஹமீர்பூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
minor-girl-raped-murdered
அவரின் உடலில் ஆயுதங்களால் தாக்கப்பட்ட அடையாளங்கள் உள்ளன. உடற்கூறாய்வில் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்துவருகிறது” என்றார்.
இதையும் படிங்க:பத்து வயது சிறுமி கொலை - இளைஞர் கைது!