கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு, 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால், ரயில், பேருந்து, டாக்சி, விமானம் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் டும்காவிலிருந்து கடந்த 24 ஆம் தேதி பதினாறு வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால், பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தனது ஆண் நண்பனிடம் உதவி கேட்டுள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த அவர் சிறுமியை டும்கா அருகிலுள்ள வனப்பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, அங்குச் சிறுமி சென்றுள்ளார். அப்போது, அவர் தனது நண்பர்கள் ஒன்பது பேருடன் சேர்ந்து சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்தாகக் கூறப்படுகிறது.