ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் யாதவ் (48). இவருக்கு திருமணமாகி அமீர் யாதவ் (21) என்ற மகளும், சுனைனா (12) (அனைவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று காலை சிறுமி சுனைனா வீட்டின் அருகேயுள்ள வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிறுமியை கடத்திச் சென்றனர். பின்னர் நான்கு பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து விட்டின் அருகே சிறுமியை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.