உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பட்டியலின சிறுமி ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்த தப்பிய சிறுமி, இது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார்.
உடனே உறவினர்கள் அப்பகுதி காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல் துறையினர் இருவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.