ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளதால், இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) பல ஆன்லைன் படிப்புகளைத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், " சுற்றுச்சூழலை நேசிக்கும் மாணவர்களுக்காகவும், பாதுகாக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவும் "eGyanKosh" திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது" எனப் பதிவிடப்பட்டுள்ளன.
'eGyanKosh' திட்டத்தில் உள்ள Wind energy, Solar Energy, Waste Management, Wild Life போன்ற பல வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதை http://egyankosh.ac.in/handle/123456789/60099 என்ற இணையதளம் மூலம் எளிதில் அணுகலாம். இதே போல், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், அறிவியல், பொறியியல் படிப்புகளையும் பயிலும் வகையில் தொடங்கியுள்ளனர்.