தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களிடையே ஒற்றுமையை கற்பிக்கும் வகையில் கல்வி திட்டத்தில் மாற்றம்! - தேசிய கல்வி கொள்கை

டெல்லி: பல்வேறு மாநில மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலான ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் திட்டத்தை கல்வி பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக சேர்க்க மத்திய கல்வித்துறை அமைச்சகம் தனது வழிகாட்டுதலில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சகம்
மத்திய கல்வித்துறை அமைச்சகம்

By

Published : Nov 21, 2020, 7:18 PM IST

ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் திட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட மத்திய கல்வித்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை நேற்று வெளியிட்டது. இது, www.education.gov.in. என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. பல்வேறு மாநிலங்களிடையே கலாசார உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் திட்டம் வகுக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொம்மைகளின் மூலமாக கல்வியை கற்று தர, தேசிய கல்வி கொள்கை 2020க்கு ஏற்ப ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதந்தோறும் கண்காணிக்கப்பட்டு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் திருத்தம் வகுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்கும் நோக்கில் புதிய திருத்தம் பள்ளிகளிடையே பகிரப்படும் என கல்விதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் திட்டம்

ABOUT THE AUTHOR

...view details