முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 66 வயதான இவர் 2014 -19ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார். இவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அருண் ஜேட்லி மரணம் -ஸ்மிருதி ராணி இரங்கல்
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
arun jaitley
அந்தவகையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அருண் ஜேட்லிக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
”எதற்கும் அஞ்சாமல் பிறரது நலனில் அதிக அக்கறை கொண்டு உறுதியுடன் இருந்துள்ளார். சிறந்த பேச்சாளர், சட்டத்தின் மூலம் இந்த தேசத்திற்காக எந்த சமரசமும் இல்லாமல் பல அர்ப்பணிப்பு பணிகளை செய்துள்ளார். அன்புக்குரியவர்க்கு எனது ஆழ்ந்த இரங்கல், அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.