தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசுத்துறை வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் ரத்து - பேருந்தில் சென்ற அமைச்சர்! - அரசு பேருந்தில் பயணம் செய்த கல்வித்துறை அமைச்சர்

புதுச்சேரி: அரசு பெட்ரோல் பங்க்கில் கோடிக்கணக்கில் அரசு துறைகள் பாக்கி வைத்துள்ளதால், அரசுத்துறை வாகனங்களுக்கு டீசல் போடுவது நிறுத்தப்பட்டதால், வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார்.

-pudhucherry
-pudhucherry

By

Published : Jan 3, 2020, 4:31 PM IST

புதுச்சேரி அமைச்சரவைக்குச் சொந்தமாக எட்டுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் செயல்படுகின்றன. இந்த பங்க்குகளில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் அரசுத்துறை வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கடனில் நிரப்பப்பட்டு, அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட துறை வழங்குவது வழக்கம்.

அதன்படி, புதுச்சேரி ஈசிஆர் அமுதசுரபி பெட்ரோல் பங்க்கில் பல அரசுத்துறைகள் ரூ.2.30 கோடி ரூபாய்வரை பாக்கி வைத்துள்ளனர். இதனால் பெட்ரோல் பங்க் நடத்துவதில் அந்நிறுவனத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு அரசு வாகனங்களுக்கு கடனில் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டாம் என அமுதசுரபி நிறுவனம் உத்தரவிட்டது. இதன் காரணமாக நேற்றிரவு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் வாகனத்திற்கு டீசல் நிரப்ப ஊழியர்கள் மறுத்துவிட்டால், தனது சொந்த ஊரான காரைக்காலுக்குச் சென்றிருந்த வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் இன்று மதியம் அரசு பேருந்தில் புதுச்சேரிக்கு திரும்பினார். இதுகுறித்து இன்று மாலை புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே புதுச்சேரி சுகாதாரத்துறை ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பெட்ரோல், டீசல் போடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் தங்குதடையின்றி இயங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்குகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனம் - ட்விஸ்ட் வைத்த மத்திய உள்துறை!

ABOUT THE AUTHOR

...view details