புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக பெய்த தொடர் மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தொடர் மழையினால் மரப்பாலம் ,கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.
அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பு மேலும், அவர் பேசுகையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், வார்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளாட்சித் துறை மூலம் நடைபெற்று வருவதாகவும், உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வார்டு மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க:
கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் - புதுச்சேரி முதலமைச்சர்..!