புதுச்சேரியில், மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அறையில், மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் சேவையை தொடங்கி வைத்தார்.
ஆன்லைன் மின் கட்டண சேவை: புதுவை அமைச்சர் தொடங்கி வைத்தார் - inaugurat
புதுச்சேரி: மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் சேவையை மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் கமலக்கண்ணன்
அப்போது பேசிய அவர், எற்கனவே ஒரு வங்கியுடன் மட்டும் இணைந்து மின் துறை ஆன்லைன் கட்டண சேவையை செய்து வந்தது. தற்போது புதுச்சேரி மின்துறை, 55 வங்கிகளுடன் இணைந்து ஆன்லைன் கட்டண சேவையை தொடங்கியுள்ளது. மேலும், புதுச்சேரியில் உள்ள வீடு, அரசு அலுவலகங்களுக்கு சோலார் திட்டத்தை தொடங்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
.