மக்களவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக வெற்றிபெற்று பாஜக தலைமையில் மோடி இராண்டாம் முறை பிரதமர் ஆகியுள்ளார். அவருடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். கடந்த பிரதமர் மோடி ஆட்சியில் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கருக்கு, இந்த முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
குஜராத் மாநிலங்களவை இடைத்தேர்தலில் ஜெய்சங்கர் வெற்றி! - அமைச்சர் ஜெய்சங்கர்
காந்திநகர்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
பிரதமர் மூலம் நியமிக்கப்படும் எந்த ஒரு அமைச்சராக இருந்தாலும் அவர் பதவி பெற்ற அடுத்த ஆறு மாத காலக்கட்டத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக வேண்டும். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கு இன்று காந்திநகரில் மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைப்பெற்றது. வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைப்பெற்றது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், மற்றொரு பாஜக தலைவர் ஜூக்லாஜி தாக்கூர் ஆகிய இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். இதில் ஜெய்சங்கர் 104 வாக்குகள் பெற்று தற்போது அதிகாரப்பூர்வமாக மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார். அவர் வெற்றியைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.