தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் பிளாஸ்டிக் உபயோகித்த கடைகளுக்கு ரூ.10,000 அபராதம்! - பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்

புதுச்சேரி: தடையை மீறி பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி வந்த கடைகளுக்கு புதுச்சேரி நகராட்சித்துறை சார்பில் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரி நகராட்சித்துறை அபராதம்  பிளாஸ்டிக் பயன்பாடு  பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்  plastic usage in pudhucherry
புதுச்சேரி பகுதியில் பிளாஸ்டிக் உபயோகித்த கடைகளுக்கு தலா பத்தாயிரம் அபராதம்

By

Published : Dec 17, 2019, 1:43 PM IST

சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் புதுச்சேரி அரசு தடை விதித்தது. புதுச்சேரி முழுவதும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது, சுற்றுச்சூழல் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் உபயோகம் குறித்து அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி ரங்கப் பிள்ளை வீதியில் உள்ள கடைகளில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் அலுவலர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுச்சேரி பகுதியில் பிளாஸ்டிக் உபயோகித்த கடைகளுக்கு தலா பத்தாயிரம் அபராதம்

அப்போது, அப்பகுதியில் மொத்தம் ஐந்து கடைகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி துறை சார்பில் அந்தக்கடைகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ. 28.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details