தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சந்தை குழு குறைந்தபட்ச ஆதரவு விலையில் பாதிப்பு இருக்காது - தோமர் - Farmers protest

டெல்லி: புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பாதிப்பு இருக்காது எனவும், இதுகுறித்து விவசாயிகளிடம் விளக்கமளிக்க முயற்சித்து வருவதாகவும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண்துறை அமைச்சர்
மத்திய வேளாண்துறை அமைச்சர்

By

Published : Dec 10, 2020, 5:22 PM IST

Updated : Dec 10, 2020, 7:54 PM IST

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 13 விவசாய சங்களுக்கு மத்திய அரசு வரைவு திட்டத்தை அனுப்பியது. ஆனால், அவற்றை நிராகரிக்கப்போவதாகவும் போராட்டம் தீவிரப்படவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பாதிப்பு இருக்காது எனவும் இதுகுறித்து விவசாயிகளிடம் விளக்கமளிக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சந்தையினால் ஏற்படும் சிக்கல்களிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்ய அரசு விரும்புகிறது. எனவே, அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எந்த விலையில் வேண்டுமானாலும் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய பொருள்களை விற்க முடியும்.

இதுகுறித்த எங்களின் திட்டத்தை விவசாயிகளுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால், சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். வேளாண் சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதோடு தயார் நிலையில் உள்ளோம். அவர்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

விவசாய உற்பத்தி சந்தை குழு, குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றில் புதிய சட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதுகுறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளிக்க முயற்சிக்கிறோம்.

வேளாண்துறை மாநில பட்டியலில் உள்ளதால் புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுபடி ஆகாது என பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பலர் தெரிவித்திருந்தனர். வர்த்தகம் உள்ளிட்டவற்றில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை உண்டு. விவசாயிகளின் நிலத்தை தொழிலதிபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொள்வார்கள் என சித்தரிக்கப்படுகிறது.

குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒப்பந்த விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், நீங்கள் சொல்வது போன்று அங்கு நடைபெற்றதில்லை.

உற்பத்தியாளர்கள், நிறுவனங்கள் ஆகியோருக்கிடையே மட்டும்தான் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும். இதற்காக, சட்டத்தில் திருத்தம் செய்துள்ளோம். விவசாயிகளின் நிலங்கள் மீது ஒப்பந்தம் மேற்கொள்ளவோ குத்தகை எடுக்கவோ திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 2006ஆம் ஆண்டு, சுவாமிதான் அறிக்கை வெளியானது. உற்பத்தி பொருள்களின் விலையை விட 1.5 மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக, அது நிலுவையில் இருந்த நிலையில், மோடி அரசு தான் அதனை அமல்படுத்தியது.

விவசாயிகள், நிறுவனங்கள் ஆகியோருக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளும் பட்சத்தில் பயிர்களை பயிரிடும் வகையில் விவசாயிகளின் நிலத்தில் உள்கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். ஒப்பந்தம் முடிந்த பிறகு, அந்த கட்டமைப்பை நிறுவனம் அகற்றிட வேண்டும்.

நிறுவனம் அதனை அகற்றாத பட்சத்தில், அந்த உள்கட்டமைப்பின் உரிமையாளராக விவசாயிகள் நியமிக்கப்படுவார்கள். இதற்கு, சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்டம் குறித்து ஆலோசிக்க விவசாயிகள் எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட கோரிக்கை விடுக்கிறோம். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்" என்றார்.

Last Updated : Dec 10, 2020, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details