தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நெய்வேலியில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் - ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு

கடலூர்: ஜூன் மாதம் நடக்க இருக்கும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

நெய்வேலியில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்

By

Published : Apr 13, 2019, 1:55 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. தொழில்நுட்பம், வானூர்தி, நர்சிங் உதவியாளர், கிளார்க் ஆகிய பணியிடங்களுக்கு ஆள்தேர்வு நடைபெற இருக்கிறது.

இதில் கடலூர், வேலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், இதற்கு ஆன்லைன் மூலம் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுழைவுச் சீட்டு 20ஆம் தேதிக்கு மேல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். ஆள்தேர்வு நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் நுழைவுச் சீட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நுழைவுச் சீட்டை 21ஆம் தேதி முதல் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்.

ABOUT THE AUTHOR

...view details