இந்தியாவில் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. 1980ஆம் ஆண்டுகளுக்குப் பின்னால் பிறந்தவர்கள், புதிய கடன்களைத் தேர்வு செய்வது 58 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. பொதுவாக கடன் வழங்குநர்கள், சில்லறைப் பிரிவை பொறுத்து வழங்குகின்றனர். இவர்கள் கடைப்பிடிக்கும் யுக்தி பெரு நிறுவனங்களை (கார்ப்பரேட்) விடச் சிறந்தது. ஏனெனில், இவர்கள் வழங்கும் கடன்கள் அதிக வட்டியை அடிப்படையாகக் கொண்டது.
அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கடன் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. இந்தக் குழுவின் முதலாவதாக கடன் வாங்குவோர், தங்களின் வாழ்க்கை தேவைக்காக கடன் வாங்குகின்றனர். அடுத்த இடத்தில் அவர்களின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்துதல் உள்ளது. மூன்றாவதாக அவர்களின் நோக்கம் வாகனங்களை வாங்குவது. அடுத்து அவசர காலங்களில் அவர்களது குடும்பங்களுக்கு வழங்குவதற்காக கடன்கள் பெறப்படுகின்றன.
அதிகரித்து வரும் நுகர்வு சார்ந்த போக்குகளைக் காண்பிப்பதில், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் நுகர்வோர் நீடித்த கடன்கள் ஆகியவற்றைக் கொண்ட பாதுகாப்பற்ற கடன்கள் பெறப்படுகின்றன.