குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது என காந்திநகர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் லேசான நில அதிர்வு - குஜராத்தில் லேசான நில அதிர்வு
காந்திநகர்: குஜராத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
காலை 8:18 மணி அளவில் இந்த நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது என்றும் அஞ்சர் கிராமத்திலிருந்து 12 கிமீ தொலைவுக்கு தென் மேற்கில் இந்த நில அதிர்வு மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் 19.5 கிலோமீட்டர் தொலைவு வரை இந்த நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இதனால் எந்தச் சேதமும் இல்லை எனவும் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.