தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை -ஜிக்னேஷ் மேவானி - பாதுகாப்பு

காந்திநகர்: குஜராத்தில் தலித்துகள் பாதுகாப்பாக இல்லை என குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

ASFASF

By

Published : Mar 22, 2019, 3:03 PM IST

தலித்துகளுக்கு எதிரான மனநிலையுடைய பாஜக அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார். அனைவருக்குமான அரசு என சொல்லிக் கொள்ளும் பாஜக தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்த முயற்சி எடுக்காதது ஏன்? எனக் கேள்வியையும் மேவானி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தலித்துகளுக்கு எதிரான அணுகுமுறையை கையாளும் பாஜக சாதியவாதத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹோலி பண்டிகை அன்று தலித் சிறுவன் அடையாளம் தெரியாத கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மேவானி இவ்வாறு கூறியுள்ளார்.

கடுமையாக தாக்கப்பட்ட தலித் சிறுவன் பக்கவாதம் வந்தது போல் உள்ளதாகவும், பேச முடியாத நிலையில் உள்ளதாகவும் மேவானி தெரிவித்தார்.


தாக்கிய கும்பலுக்கு எதிராக புகார் கொடுக்காமல் இருப்பதற்கு சிறுவன் மிரட்டப்பட்டுள்ளதாகவும் மேவானி கூறியுள்ளார்.


ABOUT THE AUTHOR

...view details