தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காணாமல்போகும் விமானத்தை கண்டுபிடிப்பதற்கான அடிப்படை முறைகள்! - radar

விமானங்கள் காணாமல்போகும் மர்மங்கள் தொடரும் வேளையில், தொலையும் விமானங்களை கண்டுபிடிக்கும் சில அடிப்படை முறைகளைப் பற்றி காண்போம்.

Flight

By

Published : Jun 11, 2019, 7:57 PM IST

தொழில்நுட்பத்தில் மனிதகுலம் அபரிமித வளர்ச்சியடைந்த போதிலும், சில விஷயங்கள் விநோதமாகவும், மனிதனின் அறிவியல் சிந்தனைக்கு எட்டாததாகவும் இருக்கின்றன. சில நேரங்களில் விமானம் காணாமல்போவது மனிதனின் அறிவியல் சிந்தனையை கேள்விக்குள்ளாக்குகிறது. உலகெங்கிலும் இதுவரையில் காணாமல்போன பல விமானங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது மர்மமாகவே உள்ளது. விமானத்தை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கும் அளவு தொழில்நுட்பம் வளர்ந்த பின்பும் இந்த மர்மம் தொடர்வது வேதனையான விஷயமாகும்.

ரேடார் (Radio Detection And Ranging)

ரேடார் சமிக்ஞைகள்

வானொலி அலைகளை பயன்படுத்தி ஒரு பொருளின் வீச்சு, கோணம், அல்லது திசைவேகம் ஆகியவற்றை கணிக்க உதவும் முறையே ரேடார் ஆகும். இதன் மூலம் விமானங்கள், கப்பல்கள் உள்ளிட்டவைகள் காணாமல்போனால் கண்டறிய முடியும். விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் ரேடார் உதவியோடு விமானங்களை கண்டறிந்துவிடும் என பலரும் நினைக்கின்றனர்.

ஆனால் ரேடாருக்கும் வரையறுக்கப்பட்ட வரம்பு உள்ளது. சமுத்திரத்தின் நடுப்பகுதியில் ரேடார் நிலையத்தை அமைக்க முடியாது. இந்த முறையில் சில சிக்கல்கள் உள்ளன. ரேடார் எல்லையை விட்டு விமானங்கள் விலகிப்போகும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் பன்னாட்டு ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் தாலஸ், ஒரு விமானத்துக்கு சற்று தொலைவில் பறக்கும் விமானம், அதனைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தார். ரேடார் வரையறை மிகவும் மோசமாக உள்ள நாடுகளுக்கு இந்த முறை உதவிகரமாக இருந்தது.

மிதக்கும் கறுப்புப் பெட்டி

கறுப்புப் பெட்டி

2009ஆம் ஆண்டு ஏர் ஃபிரான்ஸ் ஃபிளைட் 447 (Air France Flight 447) செயலிழந்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. இதில் விமானக் குறிப்புகள், ஒலிப்பதிவுகள் அடங்கிய கறுப்புப் பெட்டி பிரெஞ்சு அலுவலர்களால் கடலுக்கடியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு விமானம் செயலிழந்து நீரில் விழுந்தால், கறுப்புப் பெட்டி தானாக விமானத்தை விட்டு நீங்கும்படி மாடல் அமைக்கப்பட்டது. மார்க் டீ. ஏஞ்சலூசி என்பவர் அமைத்த இந்த மாடலில் ஒரு மிதவை சாதனத்தினுள் கறுப்புப் பெட்டி பொருத்தப்பட்டிருக்கும். விமானம் செயலிழந்து நீரில் விழுந்த மறுகணமே கறுப்புப் பெட்டி வாயு அழுத்தத்தினால் விமானத்தைவிட்டு நீங்கிவிடும். இது கடலில் மூழ்கிய விமானத்தை கண்டறிய உதவியாக இருக்கும்.


நீருக்கடியில் இருந்து எதிரொலி

கிறிஸ்டோபர் எஸ். ஹஸ்கம்ப், போனி எல். கோர்சிக் ஆகியோர் முயற்சியில் உருவான நீர் சூழலில் விமானத்தைக் கண்டறியும் முறை மிக முக்கியமானது. விமானத்தின் பல்வேறு பகுதிகளில் எதிரொலி எழுப்பும் கருவிகளை பொருத்துவதன் மூலம், சோனார் முறையை பயன்படுத்தி விமானம் இருக்கும் இடத்தை அறியலாம். சோனார் முறையைப் பயன்படுத்தும்போது நீரின் அடியில் இருந்து எதிரொலி வந்தால் விமானம் மூழ்கியிருக்கும் இடத்தை உறுதிசெய்ய முடியும்.

சோனார் முறையில் கண்டுபிடிக்க

விமான பயணிகளின் செல்போனில் தடங்காட்டி (ஜிபிஎஸ்) சிப் பொருத்துவது, விமானத்தில் பயணிக்கும்போது மொபைல் நெட்வொர்க் கிடைப்பதற்கான அடிப்படை நிலையம் அமைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படை நிலையங்கள் மூலம் வணிக செயற்கோளுக்கு தொடர் சமிக்ஞைகள் அனுப்பப்படும், அதன்மூலம் விமானம் காணாமல்போனால் எளிதில் கண்டறியலாம் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழு நம்புகின்றது. ஆனால் அறிவியலுக்கு சவால்விடும் விநோதமான செயல்களும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details