தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதீத மது... விபரீத ஆசை...! - தத்தளிக்கும் கப்பல் கேப்டன் - sex fantasies

மும்பை: கட்டிய மனைவியை மாற்றானுக்கு விருந்தாக்க நினைத்த வணிக கப்பல் கேப்டனின் பிணை (ஜாமீன்) மனுவை மும்பை நீதிமன்றம் நிராகரித்தது.

Merchant navy captain who forced wife to have sex with other men

By

Published : Nov 2, 2019, 11:39 AM IST

மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது கணவனை கள்வனாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

அப்பெண்ணின் கணவன் வணிக கப்பல் ஒன்றில் கேப்டனாகப் பணிபுரிந்துவருகிறார். அவர்களுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. இனிய இல்லறத்தின் சாட்சியாக அழகிய மகன் உள்ளார்.

அவர் அளித்த புகார் வருமாறு:

சம்பவத்தன்று எனது வீட்டிற்கு பார்வையாளர் ஒருவர் வந்தார். அச்சமயம் எனது கணவர் அதீத மதுபோதையில் ஆழ்ந்திருந்தார். இருவரும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் என்னிடம் பேச்சுக் கொடுத்த கணவர், அந்தப் பார்வையாளருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்.

இதைக் கேட்டு நான் அதிர்ந்து போனோன். உடனடியாக மறுப்பு தெரிவித்தேன். எனினும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து என்னை நச்சரித்தார். அந்தப் பார்வையாளரும் நானும் இன்பமாக இருக்க வேண்டும் என வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்.

இதற்கு நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன். இதனால் எனது அந்தரங்கம் தொடர்பான சில புகைப்படங்கள், காணொலிகளை இணையத்தில் கசியவிடப்போவதாக மிரட்டினார். ஆகவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி. தியோ, குற்றஞ்சாட்டப்பட்டவரின் பிணை மனுவை நிராகரித்தார். மேலும் அவரின் செயல் ஒழுக்கக்கேடானவை, விபரீதமானவை என்று கண்டித்தார்.

கீ செயின் (விரும்பியவருடன் உறவு) என்ற விபரீத மேற்கத்திய கலாசாரம் வளரும் நாடுகளிலும் விஷம்போல் பரவிவருவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்ப்பதுபோல் இந்த வழக்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கணவனின் மனைவி தனது அம்மாதான்...! - காவல் துறையினரை கதிகலங்க வைத்த 2 குழந்தைகளின் தாய்!

ABOUT THE AUTHOR

...view details