தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவை துண்டாட பாஜகதான் விரும்புகிறது: மெகபூபா முப்தி - காஷ்மீர்

ஸ்ரீநகர்: இந்தியாவை துண்டாட பாஜகதான் விரும்புகிறது என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

mehbooba

By

Published : Apr 15, 2019, 10:37 AM IST

காஷ்மீர் மாநிலத்துக்கு தனி பிரதமர் வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பரப்புரையில் கலந்துகொண்ட மோடி, உமர் அப்துல்லாவின் கருத்து குறித்து பேசுகையில், நாட்டை துண்டாட நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என பேசினார்.

இந்நிலையில், மோடியின் கருத்து குறித்து காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்லாமியர்கள், சிறுபான்மையினரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்ற நச்சு கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் பாஜகதான் நாட்டை துண்டாட விரும்புகிறது” என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details