'தசைத் திறன் தேய்மானம்' என்பது மனித உடலில் உள்ள தசைகளை வலு இழக்கச்செய்யும் ஒரு நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரால் நடக்க இயலாது. ஆனால், அவருக்கு மன வலிமையும் தீர்மானமான உறுதியும் இருந்தால், அவரால் வேறு எந்த செயலைச் செய்வதையும் தடுக்க முடியாது. அத்தகைய ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறார், சஞ்சனா கோயல். தசைத்திறன் தேய்மான நோயாளியான இவர், தன் கனவுகளை அடைவதற்கு இந்த நோயை ஒருபோதும் தடையாக எடுத்துக்கொண்டதில்லை.
இவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக விளங்குகிறார். 'மனவ் மந்திர்' எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய தசைத்திறன் தேய்மானத்துக்கான மருத்துவமனையை நிறுவியுள்ளார். இதனால், குணப்படுத்த முடியாத இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, மீதமுள்ள வாழ்க்கையை மெல்லிய கோட்டோடு பயணிக்க வைக்க இம்மருத்துவமனை உதவுகிறது. கடந்த 18 ஆண்டுகளாக சக்கர நாற்காலியிலேயே சஞ்சனா தன் வாழ்க்கையை நம்பிக்கையாக நகர்த்தி வருகிறார்.
சோலனில் உள்ள 'ஸ்டிச் அண்ட் ஸ்டைல்' எனும் தன் ஆடைக்கடை மூலம் டஜன் கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து, அவர்களை தற்சார்பானவர்களாக ஆக்கியுள்ளார்.சஞ்சனா,
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மனையியலில் பட்டமும் பேசன் டிசைன் துறையில் முதுநிலைப் பட்டயமும் பெற்றுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சஞ்சனா இலவசமாக மருந்துகளை வழங்குகிறார். நோயாளிகளின் குடும்பத்தினரிடம் நோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார். இத்தகைய நபரைச் சந்தித்தோம்.
ஈடிவி பாரத் ஊடகத்துக்காக அவர் பேசுகையில், "நம்பிக்கை இருந்தால் எந்த நோயையும் வெல்ல முடியும். தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் ஒரு மனிதராக இருப்பவரிடம் ஒன்றுமே இல்லை" எனக் கூறினார், சஞ்சனா. 'தசைத்திறன் தேய்மான பாதிப்புக்கு எந்த சிகிச்சையும் இல்லை; ஆனால் நம்பிக்கை இந்த நோய்க்கு பெரும் சிகிச்சையாகும். பொதுவாக இந்த நோய் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கும். என்னுடைய சகோதரர்கள் இந்த நோயால் அவதிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.